தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

’டெல்லியில் 4 மடங்காக அதிகரித்த கரோனா பரிசோதனைகள்’ - டெல்லியில் கரோனா பாதிப்பு

டெல்லி: அதிக எண்ணிக்கையிலான கரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர்
முதலமைச்சர்

By

Published : Jun 28, 2020, 2:38 PM IST

தலைநகர் டெல்லியில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்துவந்தது. இது குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ட்வீட் ஒன்றினை பதிவு செய்தார்.

அதில், “டெல்லியில் மேற்கொள்ளப்படும் கரோனா வைரஸ் தொற்று பரிசோதனையை 4 மடங்கு அதிகரித்துள்ளோம். நேற்று (ஜூன் 27) ஒரே நாளில் மட்டும் 21 ஆயிரத்து 144 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. கரோனாவுக்கு எதிராக, போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

முன்னதாக நேற்று (ஜூன்28) அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “டெல்லியில் அதிகமானோர் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும் நிலைமை கட்டுக்குள் உள்ளது. கரோனா தொற்று மேலும் பரவாமல் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன” என்றார்.

டெல்லியில் 77 ஆயிரத்து 240 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இதுவரை 2 ஆயிரத்து 492 பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்தியாவின் தவப்புதல்வனுக்குப் புகழஞ்சலி - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

ABOUT THE AUTHOR

...view details