டெல்லியை அடுத்து பீராகரி பகுதியிலுள்ள தொழிற்சாலையில் நேற்றிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இத்தீவிபத்தில் தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்துவிழுந்தது.
வேகமாகப் பரவிய தீ அருகிலுள்ள கட்டடங்களிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தொடர்ந்து வேகமாகப் பரவிவரும் இத்தீயைக் கட்டுப்படுத்த 28 தீயணைப்பு வாகனங்கள் போராடிவருகின்றனர்.
டெல்லி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து மேலும், தீயைக் கட்டுப்படுத்த முயன்றதில் மூன்று வீரர்கள் காயமடைந்தனர். தீ விபத்தில் காயமடைந்தவர்கள் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து தீயை அணைக்கும் முயற்சியில் வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: உத்தரப் பிரதேசத்தில் 300 விவசாயிகள் மீது வழக்குப்பதிவு!