தலைநகர் டெல்லியில் உள்ள கலிந்தி கஞ் (Kalindi Kunj) மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே ஃபர்னிச்சர் குடோன் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், இந்த குடோனில் இன்று காலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் டெல்லி மகேன்ட்டா (Magenta) இருப்புப் பாதையில் உள்ள மெட்ரோ ரயில் சேவைகள் தற்காலிகமாக பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையம் அருகே தீ விபத்து - டெல்லி தீ விபத்து
டெல்லி: மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அருகே உள்ள ஃபர்னிச்சர் குடோனில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து
முன்னதாக தீ விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து தீயணைப்புத் துறையினர் ஃபர்னிச்சர் குடோனுக்குச் சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாகவும், ஆனால் தற்போது வரை முழுவதுமாக தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.
தீ விபத்தின் காரணம் குறித்து தகவல் ஏதும் வெளிவரவில்லை. மேலும் இந்த தீ விபத்தில் யாருக்கும் படுகாயம் ஏற்படவில்லை எனத் தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.