டெல்லி ஜான்சிராணி சாலையில் அனஜ் மண்டி என்ற பகுதியில் இன்று அதிகாலை 5.22 மணிக்கு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் அப்பகுதிக்கு விரைந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளன.
டெல்லியில் பயங்கர தீ விபத்து: 43 பேர் உடல் கருகி உயிரிழப்பு! - டெல்லியில் பயங்கர தீ விபத்து
டெல்லி: தலைநகரின் அனாஜ் மண்டி பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் இதுவரை 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டெல்லியில் பயங்கர தீ விபத்து
இந்த விபத்தில் 43 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தரப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தீ விபத்தில் சிக்கியவர்கள் மீட்கப்பட்டு ராம்மனோகர் லோகியா மருத்துவமனை, இந்து ராவ் மருத்துவமனை ஆகியவற்றுக்கு கொண்டு செல்லப்பட்டனர். இது தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடைசியாக கிடைத்த தகவலின்படி 59 பேர் தீயணைப்புப் படை வீரர்களால் மீட்க்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Last Updated : Dec 8, 2019, 10:37 AM IST