தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 8, 2020, 7:33 AM IST

ETV Bharat / bharat

தலைநகரில் இன்று சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு

டெல்லி: டெல்லி சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது.

Delhi
Delhi

நாடு முழுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கவுள்ளது. இதற்காக மெட்ரோ ரயில் சேவைகள் காலை 4 மணிக்கே தொடங்கப்பட்டது.டெல்லியில் உள்ள 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

ஆளும் ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் களத்தில் உள்ளன. தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடாக 40 ஆயிரம் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் தேர்தலில், ஒரு கோடியே 47 லட்சத்து 86 ஆயிரத்து 382 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என டெல்லி தேர்தல் அலுவலர் ரன்பீர் சிங் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

இதையும் படிங்க: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய கேஜ்ரிவால் - தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

ABOUT THE AUTHOR

...view details