டெல்லி தேர்தலில் வெற்றிப்பெற்று ஆம் ஆத்மி கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் சந்தித்துள்ளார். இத்தேர்தலில், ஆம் ஆத்மி கட்சிக்கு வியூகம் அமைத்துக்கொடுத்தவர், பிரசாந்த் கிஷோர் ஆவார்.
டெல்லியை சுத்தப்படுத்த தயாராகும் ஆம் அத்மி!
15:18 February 11
15:16 February 11
டெல்லி சட்டபேரவை தேர்தலில் மக்கள் அளித்த தீர்ப்பினை ஏற்றுக்கொள்வதாக, பாஜக எம்பி கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு வாழ்த்துக் கூறிய அவர், அவரது ஆட்சியின் கீழ் டெல்லி மேலும் வளர்ச்சி அடையும் என நம்புவதாக கூறினார்.
14:58 February 11
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி அலுவலகத்தில் வெற்றி கொண்டாட்டம் நடைபெற்றுவருகிறது. முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது மனைவியுன் கேக் வெட்டி வெற்றியை கொண்டாடினர். கெஜ்ரிவாலின் மனைவியான சுனிதாவுக்கு இன்று பிறந்தநாள் என்பதால் இரட்டை கொண்டாட்டத்தில் கெஜ்ரிவால் உள்ளார்.
14:56 February 11
ஆம் ஆத்மி - 61
பாஜக - 9
காங்கிரஸ் - 0
14:06 February 11
24 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ள ஆம் ஆத்மி, 35 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. 2 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ள பாஜக, 8 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
13:18 February 11
டெல்லி தேர்தலில் பெரும்பாலான இடங்களில் ஆம் ஆத்மி கட்சி முன்னிலை வகித்துவரும் நிலையில், சட்டப்பேரவையை கலைத்து அம்மாநில துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் உத்தரவிட்டுள்ளார்.
13:14 February 11
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்றுள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, திமுக தலைவர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
12:53 February 11
சட்டப்பேரவை முடிவுகள் வெளியான பின் ஆம் ஆத்மி கட்சியினர் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது என்று ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
12:50 February 11
ஆம் ஆத்மி - 58
பாஜக - 12
காங்கிரஸ் - 0
12:47 February 11
தேர்தல் முடிவுக்கு பொறுப்பேற்பதாக டெல்லி காங்கிரஸ் தலைவர் சுபாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
12:45 February 11
சீலம்பூர் தொகுதியை கைப்பற்றிய ஆம் ஆத்மி!
ஆம் ஆத்மி கட்சி சார்பாக சீலம்பூர் தொகுதியில் போட்டியிட்ட அப்துல் ரஹமான் வெற்றிபெற்றுள்ளார்.
12:08 February 11
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. 58 இடங்களில் ஆம் ஆத்மி முன்னிலை வகிப்பதன் மூலம், அக்கட்சி டெல்லியில் ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், அக்கட்சியின் ஆதரவாளர்கள் அலுவலகத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
11:50 February 11
ஆம் ஆத்மி - 57
பாஜக - 13
காங்கிரஸ் - 0
11:47 February 11
டெல்லி துணை முதலமைச்சர் பின்னடைவு!
பட்பர்கன்ஞ் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிடும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பின்னடைவை சந்தித்துள்ளார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ரவி நேகியை விட சிசோடியா 1427 வாக்குகள் குறைவாக பெற்றுள்ளார்.
11:23 February 11
ஆம் ஆத்மி - 55
பாஜக - 15
காங்கிரஸ் - 0
11:21 February 11
முடிவுகள் குறித்து பேசிய டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி, "ஆம் ஆத்மி கட்சிக்கும் பாஜகவுக்கும் இடையே இடைவெளி உள்ளது முடிவுகள் மூலம் தெரிகிறது. இன்னும் நேரம் உள்ளது. முடிவுகள் என்னவாக இருந்தாலும், மாநில தலைவர் என்ற சார்பில் பொறுப்பேற்பேன்" என்றார்.
11:20 February 11
டெல்லி சட்டப்பேரவைக்கான தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டுவருகிறது. இதில், ஆம் ஆத்மி 56 தொகுதிகளில் முன்னிலை வகித்துவருகிறது. இதன்மூலம், மிகப் பெரிய வெற்றியை ஆம் ஆத்மி கட்சி பதிவு செய்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ்கூறுகையில், "'டெல்லி தேர்தல் முடிவுகள் நாட்டுக்கு ஒரு செய்தியை சொல்லவுள்ளது. இந்த முறை வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்துள்ளனர். பாஜகவின் வெறுப்பு அரசியல் நீண்ட காலம் நிலைக்காது" என தெரிவித்துள்ளார்.
11:20 February 11
மாடல் டவுன் தொகுதியில் பாஜகவின் நட்சத்திர வேட்பாளரான கபில் மிஸ்ரா 98 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
11:20 February 11
சொற்ப வாக்குகளில் முன்னிலை வகிக்கும் டெல்லி துணை முதலமைச்சர்!
பட்பர்கன்ஞ் தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிடும் டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தன்னை எதிர்த்து போட்டியிட்டுள்ள ரவி நேகியை விட 112 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை வகிக்கிறார்.
10:41 February 11
ஆம் ஆத்மி - 53
பாஜக - 17
காங்கிரஸ் - 0
10:35 February 11
தேர்தல் இயந்திரங்கள் மீது குற்றச்சாட்டு சுமத்தும் திக் விஜய சிங்!
தேர்தல் இயந்திரங்கள் மூலம் வாக்களிக்கும் முறை மறு பரிசீலனை செய்யப்படுமா? 1.3 பில்லியன் மக்கள் வாழும் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், தேர்தல் முடிவுகளை நேர்மையற்றவர்கள் ஹாக் செய்ய அனுமதிக்கக் கூடாது என காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
10:22 February 11
ஆம் ஆத்மி - 49
பாஜக - 21
காங்கிரஸ் - 0
10:14 February 11
ஆம் ஆத்மி - 50
பாஜக - 20
காங்கிரஸ் - 0
10:04 February 11
நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன ?
ஆம் ஆத்மி
- அரவிந்த் கெஜ்ரிவால் - புது டெல்லி - முன்னிலை
- மணிஷ் சிசோடியா - பட்பர்கன்ஞ் - முன்னிலை
- சோம்நாத் பாரதி - மால்வியா நகர் - முன்னிலை
- ராகவ் சட்டா - ராஜேந்தர் நகர் - முன்னிலை
- அதிஷி மெர்லினா - கல்காஜி - பின்னடைவு
பாஜக
- கபில் மிஸ்ரா - மாடல் டவுன் - முன்னிலை
- தஜிந்தர் சிங் பக்கா - ஹரி நகர் - பின்னடைவு
காங்கிரஸ்
- ஹருண் யூசப் - பல்லிமாரன் - பின்னடைவு
- அல்கா லம்பா - சாந்தினி சவுக் - பின்னடைவு
- அரவிந்தர் சிங் லவ்லி - காந்தி நகர் - பின்னடைவு
09:57 February 11
ஆம் ஆத்மி - 50
பாஜக - 20
காங்கிரஸ் - 0
09:26 February 11
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிலை நிலவரம் (70/70)
ஆம் ஆத்மி - 55
பாஜக - 13
காங்கிரஸ் - 0
மற்றவை- 1
09:01 February 11
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் முன்னிலை நிலவரம் (63/70)
ஆம் ஆத்மி - 48
பாஜக - 14
காங்கிரஸ் - 0
மற்றவை - 1
08:15 February 11
டெல்லியை சுத்தப்படுத்த தயாராகும் ஆம் அத்மி!
70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தலைநகரைப் பிடிக்க ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப் போட்டி நிகழ்வதால் பரப்புரையில் பல்வேறு காரசாரமான கருத்து மோதல்கள் ஏற்பட்டன.
சனிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவில் 62.59 விழுக்காடு வாக்குகள் பதிவானதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள், இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன.