டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெற்றது. இதன் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி 63 இடங்களில் ஆம் ஆத்மி வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துள்ளது. இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட அரவிந்த் கெஜ்ரிவால் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
புதுவித அரசியலில் ஈடுபட்டோம் - அரவிந்த் கெஜ்ரிவால் வெற்றி உரை - Delhi Assembly elections
வளர்ச்சிக்கான புதுவிதமான அரசியலில் ஈடுபட்டது தேர்தலில் வேலை செய்துள்ளதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "'டெல்லி மக்களை நேசிக்கிறேன். புதுவிதமான அரசியல் வேலை செய்துள்ளது. அதுவே வளர்ச்சிக்கான அரசியல். இது பாரத மாதாவின் வெற்றி. இன்று செவ்வாய் கிழமை என்பதால் அனுமன் நம்மை ஆசீர்வதித்துள்ளார். அனுமனுக்கு நன்றி. இது என்னுடைய வெற்றி அல்ல. டெல்லி மக்களின் வெற்றி. என்னை அனைத்து குடும்பத்தினரும் மகன் போல் பாவித்தனர். அனைத்து குடும்பங்களுக்கும் 24 மணி நேர இலவச மின்சாரம், தண்ணீர், கல்வி கிடைத்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: 'இந்தியாவின் ஆன்மாவைக் காப்பாற்றிய டெல்லிக்கு நன்றி' - பிரசாந்த் கிஷோர்