நாடு முழுவதும் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக்கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போதிலும் பரவலை கட்டுக்குள் கொண்டுவருவது சவாலான காரியமாகவே உள்ளது.
இந்நிலையில், தனது செயலாளருக்கு கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்ட தென்-மேற்கு மாவட்ட நீதிபதிக்கு மேற்கொண்ட பரிசோதனையில் கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது.
டெல்லியில் உள்ள தென்-மேற்கு மாவட்ட நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் உதவியாளருக்கு கரோனா தொற்று இருப்பது கடந்த ஞாயிற்றுக் கிழமை உறுதிசெய்யப்பட்டது. இதனால், தலைமை நீதிபதி தன்னைதானே தனிமைப்படுத்திக்கொண்டார்.