டெல்லி தியாகராஜா அரங்கில் நடந்த கல்வி விழாவில் நேற்று அம்மாநில துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா பங்கேற்றார். அந்த விழாவில் அவர் பல மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
பள்ளிக் கல்வியில் கலக்கும் டெல்லி அரசு - Delhi Government
டெல்லி: 12ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதும் பொதுத் தேர்வின் பதிவுக் கட்டணத்தை டெல்லி அரசு தாமே ஏற்கும் என டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
Manish sisodia
அப்போது மணிஷ், மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மாணவர்களின் பொதுத் தேர்வு பதிவுக் கட்டணத்தை இனி டெல்லி அரசே ஏற்கும் என தெரிவித்தார். இது பலர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பள்ளிக் கல்வியில் பெரும் மாற்றத்தை உண்டாக்கும் வகையில் செயல்படும் டெல்லி அரசின் மற்றொரு சாதனையாக இது பார்க்கப்படுகிறது.