தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வருவாய் பற்றாக்குறையில் தவிக்கும் தலைநகரம்! - டெல்லி ஊரடங்கு

டெல்லி மாநிலத்திற்கு மத்திய அரசு நிதி உதவி அளிக்கவில்லை என்று அம்மாநில நிதியமைச்சர் மணிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

மணிஷ் சிசோடியா
மணிஷ் சிசோடியா

By

Published : May 31, 2020, 6:34 PM IST

இதுகுறித்து அவர் கூறுகையில், "டெல்லி அரசின் ஒரு மாத செலவினம் 3 ஆயிரத்து 500 கோடி ரூபாயாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் வந்த வரி மட்டும் 500 கோடியாகும். மேற்படி மற்ற வரிகளில் இருந்து ஆயிரத்து 735 கோடி ரூபாய் வந்தது. ஆனால் அரசிற்கு பல செலவுகளுக்கு போதிய நிதி இல்லாததால் பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

குறிப்பாக ஆசிரியர்கள், கரோனா நேரத்தில் உழைக்கும் மருத்துவர்கள் உள்பட பல துறைகளில் பணியாற்றும் நபர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்.

இதனால் இரண்டு மாதங்களுக்கு ரூ. 7 ஆயிரம் கோடி தேவை இருப்பினும் ஆனால் மத்திய அரசிடம் ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வலியுறுத்தியிருந்தோம். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் அனுப்பியிருந்தோம். மற்ற மாநிலங்களுக்கு உதவிவரும் மத்திய அரசு டெல்லிக்கு பேரிடர் பெயரில்கூட எவ்வித நிதி உதவியையும் வழங்கவில்லை" என்றார்.

இதையும் படிங்க:உத்தரகாண்ட் அமைச்சரின் மனைவிக்கு கரோனா உறுதி!

ABOUT THE AUTHOR

...view details