தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சுனந்தா புஷ்கரின் ட்விட்டர் பதிவுகள் தொடர்பாக இன்று விசாரணை

புதுடெல்லி: சுனந்தா புஷ்கரின் கடைசி ட்விட்டர் பதிவுகளை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவேண்டும் என்று கூறி சஷி தரூர் தரப்பு தொடுத்த வழக்கு, ரூஸ் அவென்யூ நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

delhi
delhi

By

Published : Jan 22, 2020, 11:46 AM IST

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவர்களுள் ஒருவரான சசி தரூரின் மனைவி 2014ஆம் ஆண்டு ஜனவரி 17ஆம் தேதி, டெல்லியில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துக் கிடந்தார். இந்த மரணம் அப்போது பல சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்த விவகாரத்தில் சசி தரூர் மீது தற்கொலைக்குத் தூண்டுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில், டெல்லி காவல்துறை சுனந்தாவின் ட்விட்டர் பதிவுகளை குற்றப்பத்திரிகையில் சேர்க்கவில்லை என்று கூறி, சசி தரூர் தரப்பு மூத்த வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா, ரூஸ் அவென்யூ சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.

சுனந்தாவின் கடைசி ட்வீட்டின் படி, அவர் மனநிலை சாதாரணமாக இருப்பதாகத் தெரிகிறது என்றும், இறப்பதற்கு முன்பு வரை அதாவது ஜனவரி 17ஆம் தேதி அதிகாலை 4.46 வரை அவர் ட்வீட் செய்துள்ளார். சுனந்தா புஷ்கர் கொலை செய்யப்படவும் இல்லை, தற்கொலை செய்துகொள்ளவும் இல்லை என்றும் மூத்த வழக்கறிஞர் விகாஸ் பஹ்வா தெரிவித்திருந்தார்.

டெல்லி காவல் துறையினர் குற்றப்பத்திரிகையின் ஒரு பகுதியாக ட்விட்டர் பதிவுகளை முறையாகத் தாக்கல் செய்யவில்லை; பல சமூக ஊடக தளங்களில், இந்த விவரங்கள் இருக்கின்றன என்றும் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது.

இதையும் படிங்க: சசி தரூர் எழுதிய புத்தகத்திற்கு சாகித்ய அகாடமி விருது!

ABOUT THE AUTHOR

...view details