நாடு முழுவதும் ’மீ டு’ (#Metoo) சர்ச்சை அதிர்வலைகளை ஏற்படுத்திவந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சர் எம்.ஜே. அக்பர் மீது பத்திரிகையாளர் பிரியா ரமணி பாலியல் குற்றச்சாட்டு சுமத்தினர். தானும் எம்.ஜே. அக்பரும் ஒரே ஊடக நிறுவனத்தில் பணியாற்றிவந்தபோது, அவர் தன்னை பாலியல் சீண்டலுக்கு உட்படுத்தினார் என பிரியா ரமணி தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து அவர் பதவி விலக வேண்டும் என கோரிக்கை எழுந்தது. பின்னர், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். 2018ஆம் ஆண்டு, பிரியா ரமணி, அவர் மீது டெல்லி நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இதனிடையே, 2019ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி நூலாசிரியரும், பத்திரிகையாளருமான கசாலா வாஹப் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். ஒரே ஊடக நிறுவனத்தில் பணியாற்றியபோது, எம்.ஜே. அக்பர் தன்னிடம் எப்படி நடந்து கொண்டார் என்பதை அவர் நீதிமன்றத்தில் கூறினார்.