கடந்த 2017ஆம் ஆண்டு, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து பாஜக தலைவர் கபில் மிஸ்ரா அவதூறு கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
மன்னிப்பு கேட்ட பாஜக தலைவர்: வழக்கை முடித்து வைத்த நீதிபதி - சுகாதாரத்துறை அமைச்சர் சத்யந்திர ஜெயின்
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்த பாஜக தலைவர் கபில் மிஷ்ரா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட காரணத்தால் இது குறித்த வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் கபில் மிஸ்ரா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டால் அவதூறு வழக்கு திரும்பப் பெறப்படும் என டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யந்திர ஜெயின் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க கபில் மிஸ்ரா ஒத்துக் கொண்டதால் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது, சத்தியேந்திர விஜய் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக கபில் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.
TAGGED:
Kapil Mishra tenders apology