கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் அமல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கின்போது, டெல்லி நிஜாமுதீன் மார்கஸில் நடைபெற்ற சமய மாநாட்டில், விசா விதிமுறைகளை மீறி, சட்டவிரோதமாக மிஷனரி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக கூறி இந்தோனேசியர்கள் 198 பேர் உள்பட பல வெளிநாட்டினர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, மனு பேரம் பேசுவதன் கீழ் குற்றஞ்சாட்டப்பட்டவர், தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டு, குறைந்த தண்டனை வழங்க கேட்டுக்கொண்டனர். குற்றவியல் நடைமுறை சட்டம் அதிகபட்சமாக ஏழு ஆண்டு சிறை தண்டனை உள்ள வழக்குகளில் பேரம் பேச அனுமதிக்கிறது.