தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மதுபோதையில் பெண் மீது காரை ஏற்றிய காவலர் கைது - மதுபோதையில் பெண் மீது காரை ஏற்றியவர்

டெல்லி: மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற காவலர் ஒருவர், பெண் ஒருவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.

பெண் மீது காரை ஏற்றிய காவலர்
பெண் மீது காரை ஏற்றிய காவலர்

By

Published : Jul 4, 2020, 7:19 PM IST

டெல்லியின் காசிப்பூரில் அல்டோ மாடல் கார் ஒன்று சாலையைக் கடக்க முயன்றபோது பெண் ஒருவர் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்து அப்பகுதியிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த காட்சியில், “அல்டோ மாடல் காரை ஓட்டிச் சென்ற காவலர் எதிர்பாராதவிதமாக பெண் ஒருவர் மீது மோதிவிடுகிறார். அங்கிருந்த பொதுமக்கள் அந்த காரை ஓட்டி வந்தவரை பிடிக்க முயலுகின்றனர். ஆனால் கார் வேகமாக அங்கிருந்து நகருகிறது. அதில், அடிபட்டு கீழே விழுந்த பெண் தரதரவென இழுத்துச்செல்லப்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அப்பகுதியிலிருப்பவர்கள் அடிபட்டு கீழே விழுந்த பெண்ணை மீட்கின்றனர்” இவ்வாறாக பதிவாகியிருந்தது.

பதற வைக்கும் சிசிடிவி காட்சி

இந்த சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையிலும், சம்பவத்தை நேரில் கண்டவர்களின் சாட்சியங்களின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் காவல் இணை ஆய்வாளர் யோகேந்திரா என்பவர் இந்த செயலைச் செய்தார் என்பதும், அவர் மது அருந்தியிருந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை டெல்லி காவல்துறையினர் கைது செய்தனர். கார் மோதியதில் பலத்த காயமடைந்த பெண் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவருகிறார்.

இதையும் படிங்க:கொட்டும் மழை: சாலையில் கிடந்த கரோனாவால் உயிரிழந்தவரின் உடல்!

ABOUT THE AUTHOR

...view details