கரோனா வைரஸ் தாக்கம் டெல்லியில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில், அங்குள்ள மக்கள் இலவசமாக மருத்துவ ஆலோசனை பெற அம்மாநில அரசு டெலிமெடிசன் எனும் இலவச மருத்துவ சேவையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், இந்த சேவையில் மருத்துவர்கள் தாங்களாகவே முன்வந்து தங்களை இணைத்துக் கொண்டு மக்களுக்கு உதவும்படி அம்மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், "கோவிட்-19 பெருந்தொற்றை அனைத்து தரப்பினரும் எதிர்கொண்டு வருகின்றனர். இந்த நேரத்தில், பல மருத்துவர்கள் தொலைபேசி மூலம் மருத்துவ ஆலோசனைகள் வழங்கி வருகின்றனர். நீங்கள் மருத்துவராக இருந்து மக்களுக்கு இலவசமாக உதவ நினைத்தால் '08047192219' என்ற எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.