தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரோட் ஷோவில் வாக்கு சேகரிக்கும் அரவிந்த் கெஜ்ரிவால்! - வாக்கு எண்ணிக்கை வருகிற பிப்ரவரி 11 ஆம் தேதி

டெல்லி: சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு இன்று முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் நரேலா, பவானா, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்துவருகிறார்.

டெல்லி முதலமைச்சர்
டெல்லி முதலமைச்சர்

By

Published : Jan 27, 2020, 2:57 PM IST

டெல்லியில் பிப்ரவரி 8ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதையொட்டி அனைத்துக் கட்சிகளும் வாக்கு சேகரிக்கும் பணியில் முழு விச்சில் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக, டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், நரேலா, பவானா, காந்தி நகர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாகச் சென்று ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரித்துவருகிறார்.

முன்னதாக, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 70 வேட்பாளர்களின் பெயர்களையும் ஆம் ஆத்மி கட்சி ஏற்கனவே அறிவித்திருந்தது. குறிப்பாக, முதலமைச்சர் கெஜ்ரிவால் டெல்லி தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் ஏற்கனவே இப்பகுதியில் இரண்டு முறை போட்டியிட்டு வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த முறை நடைபெற்ற தேர்தலில் 70 இடங்களில் 67 இடங்களை ஆம் ஆத்மி கட்சி வென்றுள்ள நிலையில், தற்போது அதே உத்வேகத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்தத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற பிப்ரவரி 11ஆம் தேதி நடைபெறும்.

இதையும் படிங்க: இந்தியா வந்த சீன மருத்துவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பா?

ABOUT THE AUTHOR

...view details