டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் (51) கடந்த சில தினங்களாக சளி, காய்ச்சல் மற்றும் தொண்டை வலி காரணமாக அவதியுறுகிறார்.
இதையடுத்து அவர் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்டார். மேலும், தொடர்ந்து மாத்திரை மருந்துகளை உட்கொண்டுவருகிறார்.
இந்நிலையில் அவருக்கு கரோனா பரிசோதனை நடைபெறுகிறது என ஆம் ஆத்மி கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் சிங் தெரிவித்தார்.
இதனால் மாநில அரசியலில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் மட்டுமின்றி ஆம் ஆத்மி கட்சியிலிருந்து விலகிச் சென்றவர்களும் கெஜ்ரிவால் பூரண நலமடைய வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் இன்று அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதில் கெஜ்ரிவாலுக்கு கரோனா பாதிப்புகள் இல்லையென பரிசோதனை முடிவு வந்துள்ளது.
மேலும் கெஜ்ரிவாலுக்கு தற்போது காய்ச்சல் பாதிப்பு குறைந்துள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: 'காய்ச்சல், தொண்டை வலியால் அவதியுறும் கெஜ்ரிவால்'- விரைவில் குணமடைய தலைவர்கள் வாழ்த்து!