தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவை விரட்டிய குடும்பம்: குணமடைந்த 106 வயதான நபர் உட்பட 11 பேர்!

டெல்லி: ஒரே குடும்பத்தில் கரோனா தொற்றால் பாதிப்படைந்த 106 வயது நபர் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

கரோனா
கரோனா

By

Published : Jul 13, 2020, 9:53 AM IST

உலகம் முழுவதும் கரோனா தொற்று பாதிப்பை எதிர்த்து பலர் போராடி வருகின்றனர். கரோனாவுக்கு எதிரானப் போரில் வெற்றி பெற மன வலிமையும் குடும்ப ஆதரவும் முக்கியம் என்பதை டெல்லியில் 106 வயதைத் தாண்டியவரின் குடும்பத்தினர் நிரூபித்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த முக்தர் அகமது, கரோனா தொற்று பாதிப்பு காரணமாக ராஜிவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு 106 வயது ஆகிறது. முக்தர் அவ்வப்போது தனது மூன்று மகன்களை சந்தித்து வந்த காரணத்தால், அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், எதிர்பாராத வகையில் அக்குடும்பத்தைச் சேர்ந்த 11 நபர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. இருப்பினும், தீவிர சிகிச்சை காரணமாகவும் மன வலிமையினாலும் குடும்ப உறுப்பினர் அனைவரும் கரோனாவை வென்று சாதித்துக் காட்டியுள்ளனர்.

இதுகுறித்து முக்தர் அகமது நமது ஈடிவி பாரத்திடம் பேசுகையில், "கரோனா வைரஸுக்கு எதிராகப் போராட எனக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் குடும்பத்தினர் பார்த்து பார்த்து செய்தார்கள். நீங்கள் பலமாகவும், கடவுள் மீது நம்பிக்கையும் வைக்க வேண்டும்" என்றார்.

முக்தர் 1993ஆம் ஆண்டில் தனது குடும்பத்தை இழந்து, சாலைகளில் பிச்சை எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு நாள் அவரை பழைய டெல்லியில் வசிக்கும் ஒரு குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அன்றிலிருந்து முக்தர் அகமுது தனது வளர்ப்பு குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

வைரஸுக்கு எதிரான முக்தர் அகமது குடும்பத்தின் போராட்டம், அன்புக்குரியவர்களின் ஆதரவுகள் மூலம் மோசமான சூழ்நிலையை நாம் சமாளிக்க முடியும் என்பதைக் காட்டுகிறது.

ABOUT THE AUTHOR

...view details