கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து டெல்லியின் எல்லைகள் மூடப்பட்டன. ஆனால், அத்தியாவசிய தேவைகளுக்கான வாகன இயக்கங்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் மாநிலங்களுக்கிடையேயான இயக்கத்திற்காக டெல்லி எல்லைகள் நாளை முதல் திறக்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர், “டெல்லி அரசு மருத்துவமனையின் படுக்கைகள் டெல்லியை சேர்ந்தவர்களுக்கே ஒதுக்கப்படும். அனைவரின் பயன்பாட்டுக்கும் மத்திய மருத்துவமனைகள் இயங்கும். ஜூன் மாத இறுதிக்குள் டெல்லி மருத்துவமனைகளில் 15 ஆயிரம் படுக்கைகளின் தேவை உண்டாகும். அனைத்து உணவகங்கள், வணிக வளாகங்கள், வழிபாட்டு தளங்கள் திறக்கப்படும். விருந்தகங்கள், ஹோட்டல்கள் மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டிருக்கும்” என்றார்.