இது தொடர்பாக ஊடகங்களில் பேசிய டெல்லி சபாநாயகர் ராம்நிவாஸ் கோயல், “கடந்த வாரம் எனது உதவியாளருக்கு உடல்நலை சரியில்லாமல் போனது. இதைத்தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்படது. சபநாயகர் பகுதி தனிமைப்படுத்தப்பட்டு 26 ஊழியர்களின் சளி, ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்காக அனுப்பப்பட்டது.
அதன் சோதனை முடிவுகளில், மேலும் மூவருக்கு கரோனா தொற்று உறுதியானது. எனக்கு கரோனா தொற்று இல்லையென முடிவு வந்துள்ளது. திங்கள் முதல் அலுவலகம் திறக்கப்படும்" என்றார்.