தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெறுக்கத்தக்க பேச்சு: ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு சம்மன்! - பேஸ்புக் நிறுவனம்

டெல்லி: வெறுக்கத்தக்க பேச்சு புகார்கள் தொடர்பாக டெல்லி சட்டப்பேரவையின் அமைதி மற்றும் நல்லிணக்கக்குழு ஃபேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜித் மோகனுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

delhi-assembly-panel-summons-facebook-india-v-p-mohan-over-hate-content
delhi-assembly-panel-summons-facebook-india-v-p-mohan-over-hate-content

By

Published : Sep 12, 2020, 10:18 PM IST

சமூக ஊடக தளத்தில் பணியாற்றும் சிலர் வெறுக்கத்தக்க பேச்சுகளை கட்டுப்படுத்தும் விதிமுறைகள் வேண்டும் என்றே கடைப்பிடிப்பது இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இது டெல்லியின் அமைதியைக் குலைத்ததாகக் கூறப்படுகிறது. இதன்காரணமாக ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சாதா தலைமையிலான குழு செப்டம்பர் 15ஆம் தேதி, கமிட்டி முன் ஆஜராகுமாறு ஃபேஸ்புக் இந்தியாவின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான அஜித் மோகனுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளது.

சாட்சிகள் சார்பாக முன்வைக்கப்பட்ட வலுவான சான்றுகள் தொடர்பாக, டெல்லி கலவர விசாரணையில் ஃபேஸ்புக் மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்று டெல்லி சட்டமன்றத்தின் அமைதி மற்றும் நல்லிணக்கக்குழு முடிவுசெய்துள்ளதாகத் தெரிகிறது.

சம்பந்தப்பட்ட ஃபேஸ்புக் அலுவலர்கள் இந்தியாவில் வெறுப்பைப் பரப்பும் விஷயங்களை வேண்டுமென்றே பரப்புவதாகக் கூறி, தங்களுக்கு ஏராளமான புகார்கள் வந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ராகவ் சாதா தெரிவித்துள்ளார்.

புகார்களில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து கவனமாக விவாதித்த பின்னர், குழு இந்த விவகாரத்தை விரைவாக கவனித்து நடவடிக்கைகளைத் தொடங்கியது. குழுவின் செயல்பாடுகள் வெளிப்படையானதாகவும், பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநாட்டும் பொருட்டும் செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறும் விசாரணை நேரடியாக ஒளிபரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details