டெல்லி மாநிலத்தை ஆளும் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசாங்கத்தின் ஆட்சிக்காலம் வருகிற 22ஆம் தேதியோடு நிறைவுப்பெறுகிறது.
இதையடுத்து டெல்லியில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று தேர்தல் வாக்குப்பதிவு நடக்கிறது. முடிவுகள் 11ஆம் தேதி அறிவிக்கப்படுகின்றன.
இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக ஆகிய கட்சிகள் இடையே மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகரை கைப்பற்றும் முயற்சியில் மூன்று கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டன. அந்த வகையில் கடந்த முறை இழந்த டெல்லியை இம்முறை மீட்கவும், ஆட்சி அதிகாரத்தை தக்க வைக்க ஆம் ஆத்மியும், தோல்வி முகத்தினை மாற்ற காங்கிரசும் முயற்சிகள் மேற்கொண்டன.
டெல்லியை பொறுத்தமட்டில் காங்கிரஸ் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 66 இடங்களில் போட்டியிடுகிறது. அதன் கூட்டணி கட்சியான ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சிக்கு நான்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
அனைத்து கட்சியினரும் தங்களின் தேர்தல் அறிக்கையில் டெல்லி மக்களுக்கு பல்வேறு இலவச திட்டங்களை அறிவித்து தேர்தலை சந்திக்கின்றனர். இதனால் டெல்லி சட்டசபை தேர்தல் கடுமையான