கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு விமான சேவைகள் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டது. பின்னர், மருத்துவ தேவைகளுக்காகவும், பிற நாட்டில் சிக்கியுள்ள இந்திய மக்களை மீட்கவும், நாட்டிலுள்ள வெளி நாட்டவர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பவும் குறிப்பிட்ட விமான சேவைகள் மட்டும் தொடங்கப்பட்டன.
இந்நிலையில் பயணிகளின் பாதுகாப்பினை அதிகரிக்கும் பொருட்டு டெல்லி விமான நிலையத்தில் புற ஊதாக்கதிர்கள் மூலமும், செல்போன் கோபுரங்கள், டார்ச் லைட் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு கிருமி நீக்கம் செய்துவருகின்றனர்.
இதுகுறித்து தெரிவித்த டெல்லி விமான நிலைய அலுவலர்கள், செல்போன் கோபுரங்களிலிருந்து வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் கிருமிகளை அளிக்க ஏதுவானதென்றும், டார்ச் லைட்டுகள் மடிக்கணிணி உள்ளிட்ட மின்சாதனப் பொருள்களிலுள்ள கிருமிகளை கொல்வதற்கும் பயன்படுவதாக தெரிவித்துள்ளது.
புற ஊதாக்கதிர்கள் ஒளி மூலம் கிருமிகளைக் கொல்ல மருத்துவமனைகளிலும் பயன்படுத்தப்படுவதாகவும், இவை பாக்டீரியா, வைரஸ், புரோட்டோசோவாக்களை எளிதில் செயலிழக்க வைக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.