தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லியில் காற்று மாசுபாடு 999 டிகிரி வெப்பநிலை...! - டெல்லியில் காற்று மாசுபாடு 999 டிகிரி வெப்ப நிலை

டெல்லி: டெல்லியில் காற்று மாசுபாடு 999 டிகிரி என்ற அபாயகரமானதாக வெப்ப நிலையில் இருப்பதாக காற்று தர அட்டவணை மூலம் தெரியவந்துள்ளது.

Delhi air turns

By

Published : Oct 28, 2019, 5:32 PM IST

இது தொடர்பாக டெல்லி மாநிலம் வெளியிட்ட காற்று தர அட்டவணையில் கூறப்பட்டுள்ளதாவது:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு டெல்லியில் உள்ள பட்பர்கஞ்ச் பகுதியில், பயங்கர சத்தத்துடன் கூடிய பட்டாசு வெடிக்கப்பட்டது. இதனால், பல்வேறு பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.

தேசிய மலேரியா கல்வி நிறுவனம் அருகே நேற்று இரவு 11 மணி நிலவரப்படி, காற்று மாசுபாடு 763 டிகிரி வெப்ப நிலை இருந்ததாகவும், அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள சாணக்கியபுரியில் இரவு 8 மணி நிலவரப்படி 189 ஆக இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மாநில காற்றின் தரவுகளின் அடிப்படையில், 0 முதல் 50 வரையிலான வெப்பநிலை பாதுகாப்பானது, 51 முதல் 100 வரையில் திருப்திகரமானது, 101 முதல் 200 வரையில் மிதமானது, 201 முதல் 300 வரை மோசமானது, 301 முதல் 400 வரை மிகவும் மோசமான நிலை எனவும், 401 முதல் 500 வரையிலான வெப்ப நிலை கடுமையானது எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

வரும் வாரங்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையும். இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details