டெல்லி: டெல்லியில் நிலவும் காற்றின் தரம் குறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்களை வெளியிட்டுள்ளது.
அதில், இன்று (டிச.9) தேசிய தலைநகர் பகுதியில் காற்றின் தரம் நீண்ட நாள்களுக்குப் பிறகு மிதமான கட்டத்திற்கு திரும்பியுள்ளது.
நேற்றைய நிலவரப்படி, டெல்லியில் அதிகப்படியான வெப்பநிலை 28.4 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 9.8 டிகிரி செல்சியஸாகவும் இருந்தது.