நாட்டின் தலைநகர் டெல்லி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் டிசம்பர் வரை மூன்று மாதங்கள் காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படுவது தொடர் கதையாகி வருகிறது. இதற்கு பண்டிகை காலங்களில் பட்டாசு வெடிப்பு, விவசாய கழிவுப் பொருட்கள் எரிப்பு என பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றும் டெல்லியில் காற்று மாசுபாடு ஆபத்து அளவை தாண்டியது. இதையடுத்து அங்குள்ள தனியார், அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. காற்று மாசுபாடு நாளையும் இவ்வாறு அதிகரித்து காணப்படும் என்று ஆய்வுகள் முன்னறிவிப்பு செய்கின்றன. எனினும் சனிக்கிழமை காற்று மாசுபாடு குறைய வாய்ப்புள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை - டெல்லி காற்று மாசுபாடு
டெல்லி: டெல்லி காற்று மாசுபாடு அதிகரிப்பு காரணமான அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காற்று மாசுபாட்டை கட்டுக்குள் கொண்டுவர ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருள் தொழில்நுட்பத்தை ஆராயுங்கள் என மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதற்கிடையில் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் யோசனை ஒன்றும் தெரிவித்துள்ளது. காற்று மாசுபாடு குறித்து கவலை தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம், அதனை கட்டுக்குள் கொண்டு வர ஹைட்ரஜன் அடிப்படையிலான எரிபொருள் தொழில்நுட்பத்தை ஆராயுங்கள் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக அண்மையில் ஆய்வறிக்கை ஒன்று வெளியானது. அதில் அண்டை மாநிலங்களில் விவசாய கழிவுப் பொருட்களை வயல் வெளியில் தீயிட்டு கொளுத்துகின்றனர். இதனால் ஏற்படும் புகைமூட்டம் டெல்லியை பாதிக்கிறது என குறிப்பிடப்பட்டிருந்தன. இதுகுறித்து பேசிய மாநில முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், விவசாய கழிவுப் பொருட்கள் எரிப்பு மட்டும் டெல்லி மாசுபாடுக்கு காரணம் அல்ல என்று குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் தொடர்ந்து அதிகரிக்கும் காற்று மாசு - காரணம் என்ன?