கிழக்கு டெல்லி அசோக் நகரைச் சேர்ந்த 25 வயதான இளம்பெண் ஷுதால் சௌத்ரி. இவருக்கும் பக்கத்து வீட்டில் வசித்த அங்கித் பாத் என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்தக் காதல் ஜோடி கடந்த மூன்று ஆண்டுகளாகக் காதலித்துவந்தனர். இந்த நிலையில் காதல் ஜோடி ஜனவரி மாதம் 30ஆம் தேதி திருமணம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் ஷுதால் கடந்த 18ஆம் தேதி உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் காட்டுப்பகுதியில் பிணமாகக் கிடந்தார். இது பற்றி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்துவந்தனர். விசாரணையில் ஷுதாலை அவரது குடும்ப உறுப்பினர்களே ஆணவக் கொலை செய்தது தெரியவந்தது.