ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 61 நாட்கள் ஆகிவிட்டன. ஆனால் இன்றும் மாநிலத்தின் முக்கிய தலைவர்கள் வீட்டு சிறையிலும், இணையதள சேவைகள் முடக்கப்பட்டும், பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டும் இருக்கின்றன.
மத்திய அமைச்சர்கள் குழுவை காஷ்மீருக்கு அனுப்புங்கள்: மோடிக்கு காஷ்மீர் எம்.பி. கடிதம்..! - Kashmir issue
சிறப்பு அந்தஸ்து நீக்கத்திற்கு பிறகு ஜம்மு - காஷ்மீரின் நிலை எவ்வாறு உள்ளது என அறிய மத்திய அமைச்சர்கள் குழுவை ஆய்வுக்கு அனுப்புமாறு பிரதமர் மோடிக்கு காஷ்மீர் எம்.பி. நசீர் அகமது லவாய் கடிதம் எழுதியுள்ளார்.
ஆனால் மத்திய அரசு சார்பிலோ காஷ்மீர் இயல்பு நிலைக்கு திரும்பிவிட்டன என பல்வேறு தரப்பினரும் தெரிவித்தனர். இந்நிலையில், காஷ்மீர் நாடாளுமன்ற உறுப்பினர் நசீர் அகமது லவாய் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், ஜம்மு - காஷ்மீர் நிலை குறித்து ஆய்வு நடத்த மத்திய அமைச்சர்கள் குழுவை அனுப்புமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அப்போதுதான் அவர்களுக்கு உண்மை நிலை தெரிய வரும். சிறப்பு சட்டப்பிரிவு நீக்கம் மக்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிப்படைய வைத்துள்ளது என்பது புரியும் என தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்கலாமே: தலையில் நெருப்புடன் ஆடிய சிறுமிகள்- இது நவராத்திரி கொண்டாட்டம்!