உத்தரகண்ட் மாநிலம் டெஹ்ராடூனை சேர்ந்த ஆர்க்கிட், 12 ஆம் வகுப்பு படித்துள்ளார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான ஆர்க்கிட், பணம் இல்லாத சமயத்தில் திருட்டிலும் ஈடுபட்டுள்ளான்.
அந்த வகையில், ஒரு திருட்டு சம்பவத்தில் கையும் களவுமாக மாட்டிய ஆர்க்கிட்டுக்கு, ஒரு வருடம் சிறை தண்டனை விதித்தனர்.
சிறையில் தனது காலத்தை ஆர்க்கிட் கழித்துகொண்டிருந்த சமயத்தில், கரோனா அச்சத்தின் காரணமாக சிறைவாசிகளுக்கு 6 மாதங்கள் பரோல் வழங்கப்பட்டது.
சிறையிலிருந்த 700 கைதிகளுடன் வெளியே வந்த ஆர்க்கிட், நேராக தனது வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால், அவரை பெற்றோர் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை.
செய்வதறியாமல் திகைத்த ஆர்க்கிட் ராய்ப்பூர் காவல் நிலையத்திற்கு சென்று நிலைமையை எடுத்துரைத்துள்ளான்.
அங்கிருந்த ஸ்டேஷன் பொறுப்பாளர் தங்கும் இடத்தை ஏற்பாடு செய்துள்ளார். காவலர்களுடன் நண்பனான ஆர்க்கிட், கரோனா காலத்தில் மக்கள் அத்தியாவசிய பொருள்கள் வழங்க காவல் துறையுடன் இணைந்து சென்று விநியோகம் செய்துள்ளான்.
மாணவரின் நல்ல குணத்தை அறிந்த காவலர்கள், சிறைவாசத்திலிருந்து விடுதலை வாங்கி கொடுத்தனர். இதுமட்டுமின்றி மாணவனை நல்வழியில் கொண்டு செல்ல வழக்கறிஞர் படிப்பிலும் சேர்த்து உதவி செய்துள்ளனர்.