கரோனா பேரிடரைத் தொடர்ந்து, முதல்முறையாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசுமுறை பயணமாக ரஷ்யாவுக்கு சென்றுள்ளார். இருநாடு உறவு குறித்து பேசியுள்ள ராஜ்நாத், இந்தியா, ரஷ்யா இடையேயான உறவில் பாதுகாப்புத் துறை முக்கிய தூணாக விளங்குகிறது என தெரிவித்தார்.
இந்திய, ரஷ்ய உறவில் பாதுகாப்புத் துறை தூணாக விளங்குகிறது - ராஜ்நாத் சிங்
மாஸ்கோ: இந்திய, ரஷ்ய நாடுகளுக்கிடையேயான உறவில் பாதுகாப்புத் துறை முக்கிய தூணாக விளங்குகிறது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேலும் அவர், "ராஜாங்க, வியூக ரீதியான உறவில் இந்தியா, ரஷ்யா சிறப்பாக செயலாற்றியுள்ளன. அதில், பாதுகாப்புத் துறையில் உள்ள கூட்டணி முக்கிய தூணாக விளங்குகிறது. ரஷ்ய துணை பிரதமர் யூரி போரிசோவ் மூலம் இந்த உறவை மறு சீரமைக்க எனக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. கரோனா கட்டுப்பாடு அமலில் உள்ள நிலையிலும் என்னை வந்து சந்தித்த அவருக்கு நன்றி் தெரிவித்துக் கொள்கிறேன்.
இங்கு நடைபெற்ற கலந்துரையாடல்கள் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும். இரு நாட்டு ராணுவத்திற்கிடையேயும் அழிக்க முடியாத நட்பு உள்ளது" என்றார்.