தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆகாஷ் ஏவுகணைகளை பயன்படுத்த திட்டம்? - ஆகாஷ் ஏவுகணை

டெல்லி: சீனா, பாகிஸ்தானை எதிர்கொள்ள அதிக உயரத்தில் பயன்படுத்தக்கூடிய ஆகாஷ் ஏவுகணைகளை, இரண்டு படைப்பிரிவுகளாக பயன்படுத்துவது குறித்து பாதுகாப்பு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

Defence Ministry to decide on Army's Rs 10,000 crore Akash missiles

By

Published : Oct 22, 2019, 3:10 AM IST

சீனா, பாகிஸ்தானின் அச்சுறுத்தல்களை சமாளிக்கும் வகையில் எல்லையில் ஆகாஷ் ஏவுகணைகளை நிறுத்துவது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சகம் முக்கிய முடிவுகளை எடுத்துள்ளது. இந்த ஏவுகணைகளை 15 ஆயிரம் அடிக்கு மேலும் பயன்படுத்தலாம்.
இந்த புதிய வகை ஆகாஷ் ஏவுகணைகள், பழையதை விட அதிக சக்தி வாய்ந்தவை. இந்த ஏவுகணைகளை லடாக் பகுதிக்கு இந்தியா அனுப்பவுள்ளது. அப்பகுதியில் சீனா, பாகிஸ்தான் பிரச்னை உள்ளது.

இந்த ஏவுகணைகளை வாங்குவதற்கு 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கையெழுத்திட பாதுகாப்பு அமைச்சகம் பரிசீலிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் இந்திய ராணுவம் மேலும் வலிமைப்பெறும். லடாக்கில் நேற்று நடைபெற்ற பாதுகாப்பு கூட்டத்தில் ராணுவ தலைமை ஜெனரல் பிபின் ராவத் இதுகுறித்து விவாதித்தார்.

ஆகாஷ் ஏவுகணைகள் இந்திய நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளதால், இது மிகவும் பாதுகாப்பானது என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: இந்திய தேசிய கீதம் இசைத்த அமெரிக்க ராணுவத்தினர்!

ABOUT THE AUTHOR

...view details