தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ரூ.2,290 கோடி மதிப்பிலான ராணுவத் தளவாடங்கள் கொள்முதல் - மத்திய அரசு - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

சுமார் 2,290 கோடி ரூபாய் மதிப்பிலான ராணுவத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

ராஜ்நாத் சிங்
ராஜ்நாத் சிங்

By

Published : Sep 29, 2020, 1:18 AM IST

பாதுகாப்புத் துறை அமைச்சகம் சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 780 கோடி ரூபாய் மதிப்பிலான சிக் சவூர் ரக துப்பாக்கிகளை அமெரிக்காவிலிருந்து கொள்முதல் செய்ய அமைச்சகம் சார்பில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான பாதுகாப்பு கொள்முதல் குழு இந்த முடிவை மேற்கொண்டுள்ளதாக அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய கடற்படை, விமானப் படைகளுக்குத் தேவையான SAAW ரக ஆயுதங்களையும் கொள்முதல் செய்ய அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த ஆயுதங்களுக்கான மதிப்பீடும் சுமார் 970 கோடி ரூபாய். இந்திய ராணுவத்திற்குத் தேவையான 540 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்நுட்பக் கருவிகளைக் கொள்முதல் செய்யவும் இந்தக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்தியா - சீனா இடையே லடாக் எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவிவரும் நிலையில் இந்த முக்கிய முடிவை பாதுகாப்புத் துறை அமைச்சகம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:வேளாண் சட்டமுன்வடிவுகள்: இரட்டை நிலைப்பாட்டில் இருக்கிறதா மகாராஷ்டிரா கூட்டணி அரசு!

ABOUT THE AUTHOR

...view details