தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் பாதுகாப்புத் துறைக்கு 101 வகையான ராணுவத் தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில், 'தற்சார்பு இந்தியா வாரம்' என்ற புதிய திட்டத்தை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கிவைக்கிறார். இத்தகவலை ராஜ்நாத் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
முன்னதாக காணொலி காட்சி வழியே நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பேசிய ராஜ்நாத் சிங், "உணவு பொருள்கள் மட்டுமின்றி கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நாட்டின் வளர்ச்சிக்காக பிரதமர் மோடி 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
அதைத் தொடர்ந்து, 'தற்சார்பு இந்தியா' திட்டத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் தற்போது பாதுகாப்புத் துறை அமைச்சகம் இறங்கியுள்ளது. பாதுகாப்பு துறைக்கு தேவையான தளவாடங்களை இந்தியாவில் உற்பத்தி செய்ய தேவையான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டுவருகிறது" என்றார்.
இதையும் படிங்க: சென்னை-அந்தமான் கண்ணாடி இழை கேபிள் திட்டம் இன்று தொடக்கம்!