பிரதமர் நரேந்திர மோடி தலையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து ஓராண்டு நிறைவுற்றதை அடுத்து, பாஜக சார்பில் ஆன்லைன் மாநாடுகள் நடைபெற்று வண்ணம் உள்ளன.
அந்த வகையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஜூன் 14ஆம் தேதி அக்கட்சியின் சார்பாக ஆன்லைன் மாநாடு நடத்தப்படவுள்ளது.
அன்றைய தினம் காலை 10.30 மணிக்கு மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாஜக தொண்டர்கள்-மக்களிடையே உரையாற்றவார் என்று ஜம்மு-காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரைனா தெரிவித்துள்ளார்.
இது குறித்து நேற்று செய்தியாளர்களிடம் அவர், மத்திய அரசின் சாதனைகள், வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவுகள், தேசிய-பிராந்திய அளவிலான முக்கியப் பிரச்னைகள் குறித்து ராஜ்நாத் சிங் உரையாற்ற உள்ளதாகக் கூறினார்.
இந்த மாநாட்டிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு பாஜக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் அசோக் குமார் கேட்டுக்கொண்டுள்ளார்.
கரோனா பெருந்தொற்று காரணமாக பொது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள சூழலிலேயே, பாஜக ஆன்லைன் மூலம் மாநாடு நடத்திவருகிறது.
இதையும் படிங்க : கட்டுக்குள் வெட்டுக்கிளி தாக்குதல் - ராஜஸ்தான் அரசு