இரண்டாம் உலகப் போரில் ரஷ்யா வெற்றி பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனை கொண்டாடும் விதமாக நாளை மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
மாஸ்கோ சென்றடைந்த ராஜ்நாத் சிங்! - இரண்டாம் உலகப்போரின் 75ஆம் ஆண்டு வெற்றி விழா
மாஸ்கோ: மூன்று நாள் அரசு பயணமாக பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ரஷ்யா சென்றடைந்தார்.
Defence Minister Rajnath Singh reached Moscow this evening on a three-day visit
இதில் ராஜ்நாத் சிங் பங்கேற்கவுள்ளார். இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையேயான ராணுவ உறவு குறித்து அவர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் பதற்றம் நிலவிவரும் சூழலில் அவரது ரஷ்ய பயணம் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது