டெல்லி: இந்தியா- சீனா இடையே எல்லையில் பதற்றம் நீடித்துவரும் நிலையில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், அக்டோபர் 23ஆம் தேதி சிக்கிம் செல்கிறார்.
அங்கு நடக்கும் தசாரா விழாவில் சாஸ்திரா பூஜையில் (ஆயுதப் பூஜை) கலந்துகொள்கிறார். மேலும் அத்தினங்களில் பல்வேறு சாலை வசதி திட்டங்களையும் தொடங்கிவைக்கிறார்.
நவராத்திரி விழாவில் சாஸ்திரா பூஜை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. அன்றைய தினம் ஆயுதங்களுக்கு பூஜைகள் செய்வார்கள். ஏற்கனவே ராஜ்நாத் சிங் ரபேல் போர் விமானங்களுக்கு பூஜைகள் செய்திருந்தார்.