தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராஜ்நாத் சிங் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளருடன் தொலைபேசியில் உரையாடல்! - ராஜ்நாத் சிங்

டெல்லி: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் மார்க் தாமஸ் எஸ்பருடன் தொலைபேசியில் உரையாடினார். கரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடிய அனுபவம் குறித்து இருவரும் ஒருவருக்கொருவர் விளக்கமளித்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Defence Minister Rajnath Singh
Defence Minister Rajnath Singh

By

Published : May 30, 2020, 12:56 AM IST

மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெள்ளிக்கிழமை அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் மார்க் தாமஸ் எஸ்பருடன் தொலைபேசி மூலம் உரையாடலை நடத்தினார்.

உரையாடலின் போது, ​​அமைச்சர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் கரோனா வைரஸ் தொற்று நோயை எதிர்த்துப் போராடிய அனுபவம் குறித்து பேசியதாகவும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில் சிறந்த ஒத்துழைப்புத் தொடர்ந்து நீடிக்கும் என பேசியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

'எங்கள் தொலைபேசி உரையாடலின்போது, பல்வேறு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தங்களின் முன்னேற்றத்தையும் நாங்கள் மதிப்பாய்வு செய்தோம். பாதுகாப்பு கூட்டாட்சியை மேலும் மேம்படுத்துவதற்கான, உறுதிப்பாட்டை உரையில் வெளிப்படுத்தினோம். பாதுகாப்பு சம்பந்தமான கருத்துகளைப் பரிமாறிக்கொண்டோம்' என ராஜ்நாத் சிங் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:உலகளவில் 15ஆயிரம் ஊழியர்களை கைவிடுகிறது ரெனால்ட் நிறுவனம்!

ABOUT THE AUTHOR

...view details