தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மும்பை தாக்குதலுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி முறையான நடவடிக்கை எடுக்கவில்லை: நிர்மலா சீதாராமன் காட்டம்

டெல்லி: 26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீவிரவாதத்திற்கு எதிராக சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

BJP

By

Published : Mar 14, 2019, 8:47 PM IST

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையில் நுழைந்த பயங்கரவாதிகள் 29 ஆம் தேதி வரை தாக்குதல் நடத்தினர்.

நகரின் முக்கியமான பகுதிகளில் நடத்தப்பட்ட இத்தாக்குதல் சம்பவத்தில் 164 பேர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அத்தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு முறையான நடவடிக்கையை எடுக்கவில்லை என பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். இது குறித்து அவர் பேசுகையில்,

"26/11 மும்பை தாக்குதலுக்கு பிறகு ஐக்கிய முற்போக்கு கூட்டணி தீவிரவாதத்திற்கு எதிராக சரியான நடவடிக்கையை மேற்கொள்ளவில்லை. எங்கு செயல்திறன் இருக்குமோ, அங்குதான் அதற்கான தடுப்பு நடவடிக்கையும் இருக்கும்.

தற்போதைய அரசாங்கம் பயங்கரவாதத்தை சகித்து கொள்ளாது. பயங்கரவாத்துக்கு எதிராக மிகவும் செயல்திறனுடன் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.

புல்வாமா தாக்குதல் நடைபெற்ற 12 நாட்களிலேயே பாகிஸ்தான் எல்லைப்பகுதிகளில் இருக்கும் பயங்கரவாத முகாம்களை நோக்கி வான்வழித்தாக்குதல் நடத்தினோம்" எனக் கூறினார்.

ABOUT THE AUTHOR

...view details