கொல்கத்தா (மேற்கு வங்கம்): இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட அதிவிரைவு கோவிட்-19 நோயைக் கண்டறியும் கருவிகளில் கோளாறு இருப்பதாக மேற்கு வங்க அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
முதலமைச்சர் மம்தா பானர்ஜி அரசு இது குறித்து மத்திய அரசை விமர்சித்துள்ளது. இதனால் பெருமளவில் இந்த நோயைக் கண்டறியும் பரிசோதனையை மேற்கொள்ள முடியவில்லை என அம்மாநில அரசு கூறியுள்ளது.
இந்திய ஆராய்ச்சிக் கழகத்தால் அனுப்பிவைக்கப்பட்ட இந்த பரிசோதனைக் கருவிகள், தொடர்ந்து பல தெளிவில்லாத முடிவுகளை அளிப்பதால், உடனடியாக வெகுசன மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, நோயைக் கண்டறிவதில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது.
முன்னதாக, புனேவில் இருக்கும், தேசிய நோய்க் கிருமி நிறுவனத்தால் வழங்கப்பட்ட கருவிகளின் எந்த விதமான கோளாறும் இல்லை என்பதை குறிப்பிட்டு இது தொடர்பான குற்றச்சாட்டுகளை அரசு கூறியுள்ளது.