தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு - அனைத்து திருடர்களும் ஏன் மோடி என்ற குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்கிறார்கள்

சூரத்: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீது தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கின் விசாரணையை சூரத் நீதிமன்றம் வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Surat court adjourns the Rahul Gandhi Defamation case

By

Published : Oct 10, 2019, 1:00 PM IST

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் பரப்புரையின்போது ராகுல் காந்தி 'அனைத்து திருடர்களும் ஏன் மோடி என்ற குடும்பப் பெயரைப் பகிர்ந்து கொள்கிறார்கள்' எனக் கூறினார். இதையடுத்து அவர் மீது அவதூறு வழக்கு பதியப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணை இன்று சூரத் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஹரியானா, மகாராஷ்டிரா மாநிலங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ளவிருப்பதால் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு ராகுல் காந்தி தரப்பிலிருந்து கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்ற நீதிமன்றம், வழக்கின் விசாரணையை வரும் டிசம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதையும் படிங்க:ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் மூத்தத் தலைவர்கள் விளக்கம்!

ABOUT THE AUTHOR

...view details