பிரெஞ்சு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டீசலில் இயங்கும் ஐ.என்.எஸ். கந்தேரி நீர்மூழ்கி கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழா மும்பையில் நடைபெற்றது. இதில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் முக்கிய கப்பல் படை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய துணை அட்மைரல் அசோக் குமார், பி17 ஏ போர் கப்பல்களின் முதல் கப்பலான எ.என்.எஸ். நீலகிரி கப்பல் இந்த நிகழ்வில் இயக்கப்படும் என்றும், விமான கேரியரும் அமைச்சரால் தொடங்கி வைக்கப்படும். கந்தேரி மற்றும் நீலகிரி கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்ததன் மூலம் கடற்படையின் பலம் பன்மடங்கு அதிகரித்துள்ளது என்றார்.
மேலும் இந்தியாவின் மிகப்பெரும் கப்பலான ஐ.என்.எஸ். விக்ரமாதித்யாவையே உடைக்கும் திறன் கொண்டது ஐ.என்.எஸ். கந்தேரி கப்பல் என்றும், நீருக்கு அடியில் உள்ள இலக்குகளை அழிப்பதிலும், ஏவுகணை ஏவுவதிலும் வல்லமை பெற்றது ஐ.என்.எஸ். கந்தேரி எனத் தெரிவித்தார்.