இதுகுறித்து அறிவிப்பு வெளியிட்டுள்ள மத்திய ரயில்வே துறை, ' நடப்பாண்டுக்கு(2019-2020) 11.58 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ரூ.2,081.68 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து நேற்று(அக்.21) நடந்த மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான நிதி வரைவினை மத்திய ரயில்வே அமைச்சகம் முன்வைத்தது. அதில் ரூ.7 ஆயிரம் முதல் ரூ. 17 ஆயிரத்து 951 வரை போனஸ் தொகையாக வழங்கப்படும் என மத்திய அமைச்சரவையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது..
அமைச்சரவையின் முடிவு இந்த ஆண்டு தீபாவளி விடுமுறைக்கு முன்பே செயல்படுத்தப்படும் என்று ரயில்வே அமைச்சகம் கூறியது.
கடந்த ஆண்டு செயல்திறனுக்காக இந்த கட்டணம் செலுத்தப்படுவதாகவும், இந்த ஆண்டு கோவிட் -19 காலகட்டத்திலும் கூட, ஷ்ராமிக் ஸ்பெஷல் ரயில்களின் இயக்கத்தில், உணவு தானியங்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் இயக்கத்திற்காக நிறைய கடின உழைப்புகளை ரயில்வே ஊழியர்கள் செய்ததற்காக இந்த போனஸ் தரப்படுவதாகவும் ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா காலத்தில் உரங்கள், நிலக்கரி மற்றும் 200க்கும் மேற்பட்ட முக்கிய பராமரிப்புத் திட்டங்களை நிறைவுற்ற ரயில்வே ஊழியர்கள் உதவியதனையும் ரயில்வே அமைச்சகம் நினைவுபடுத்தி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிங்க: வந்தே பாரத் திட்டம் மூலம் 19.40 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர்!