தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

தொழிலதிபர் தீபக் கோச்சருக்கு 19ஆம் தேதிவரை காவல்! - சந்தா கோச்சர் கணவர் தீபக் கோச்சர்

சட்டவிரோத பணப்பரிவர்த்தனைப் புகாரில் சிக்கிய தொழிலதிபர் தீபக் கோச்சரை செப்டம்பர் 19ஆம் தேதிவரை காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Deepak Kochhar
Deepak Kochhar

By

Published : Sep 8, 2020, 4:41 PM IST

முறைகேடான பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தா கோச்சர் கணவர் தீபக் கோச்சரை டெல்லியில் அமலாக்கத்துறை அலுவலர்கள் நேற்றிரவு (செப்.7) கைது செய்தனர்.

ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமைச் செயல் அலுலரான சந்தா கோச்சர் மீது பல்வேறு முறைகேடு, ஊழல் புகார்கள் எழுந்து பெரும் சர்ச்சைக்குள்ளானது.

சந்தா கோச்சார் தனது பதவிக் காலத்தில் வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடான முறையில் கடன் வழங்கியதாகவும், வீடியோகான் நிறுவனம் மூலம் அவரது கணவர் தீபக் கோச்சர் நிறுவனத்திற்கு பணப்பரிவர்த்தனை நடைபெற்றதாகவும் சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணை மூலம் விவரங்கள் வெளியாகின.

சுமார் ஆயிரத்து 875 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாக கூறப்படும் நிலையில், முறைகேடான பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சந்தா கோச்சர் கணவர் தீபக் கோச்சரை டெல்லியில் அமலாக்கத்துறை கைது செய்தது.

கைது செய்யப்பட்ட தீபக் கோச்சரை அமலாக்கத்துறை மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்தது.

அதன் பின்னர், தீபக் கோச்சரை வரும் 19ஆம் தேதிவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அனுமதித்துள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக சந்தா கோச்சர் மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான 80 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை கடந்த ஜனவரி மாதம் கைப்பற்றியது.

இதையும் படிங்க:'புதிய கல்விக்கொள்கையை செயல்படுத்த திட்டம் தயார்' - கல்வித் துறை அமைச்சர்

ABOUT THE AUTHOR

...view details