குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இந்தியா வந்த பிரேசில் அதிபா் ஜெய்ர் போல்சனாரோவை பிரதமா் நரேந்திர மோடி நேற்று டெல்லியில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் பேசிய நரேந்திர மோடி, “போல்சனாரோ வருகை இந்தியா-பிரேசில் இடையேயான உறவில் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. இந்தியாவின் பொருளாதார வளா்ச்சியில் பிரேசில் மதிப்புமிக்க கூட்டாளியாகத் திகழ்கிறது.
புவியியல் ரீதியாக இந்தியாவும், பிரேசிலும் தொலைவில் இருந்தாலும், உலகளாவிய பல்வேறு விவகாரங்களை அணுகுவதில் இரு நாடுகளுக்கிடையே ஒற்றுமை காணப்படுகிறது. இந்தியா-பிரேசில் இடையேயான உறவு மேலும் வலுப்படும் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “பாதுகாப்புச் சாா்ந்த தொழில் துறையில் இருநாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிப்பதற்கான புதிய வழிகளை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
இதையும் படிங்க...இறந்தவர்களுக்கான பத்ம விருதுகள் 2020 அறிவிப்பு