கச்சா எண்ணெய் பொருளாதாரத்தில் பெயர் பெற்ற சவூதி அரேபியா தற்பொழுது சுற்றுலாத் துறையில் கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியாக, சவூதி அரேபியாவில் முதன் முறையாக சுற்றுலாப் பயணிகளுக்கு விசாக்கள் வழங்க முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து சவூதி அரேபியாவின் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி அரேபியாவில் விசா வழங்க முடிவு செய்துள்ளோம். இங்கு வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய இடங்கள், கடல் உயிரினங்களைக் காண கடல்சார் பூங்காக்கள் என சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில், எண்ணற்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.
49 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு சவூதி அரேபியாவில் விசா வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ஆடைக் கட்டுப்பாடு நீக்கப்படும்.