தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கோவாவில் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதியா?

கோவா: சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்குவது குறித்து அடுத்த எட்டு நாள்களுக்குள் முடிவெடுக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் பிரமோத் சவாந்த் தெரிவித்துள்ளார்.

Decision on tourism resumption in eight days: Goa CM
Decision on tourism resumption in eight days: Goa CM

By

Published : Jun 24, 2020, 8:49 PM IST

இதுதொடர்பாக மாநில தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "கோவா மாநிலத்தில் மீண்டும் சுற்றுலாத் தலங்களைத் திறக்க அனுமதி வழங்க வேண்டும் என சிறிய, பெரிய ஹோட்டல் உரிமையாளர்கள் கோருகின்றனர். அரசாங்கமும் அவர்களது கோரிக்கை குறித்து சாதகமாகச் சிந்தித்துவருகிறது. இதுகுறித்து அடுத்த எட்டு நாள்களுக்குள் முடிவு எடுக்கப்படும்.

மேலும் ஹோட்டல் உரிமையாளர்கள் தங்களது விருந்தாளிகள் சென்றவுடன் அவர்கள் தங்கியிருந்த அறையை கிருமிநாசினி தெளித்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இத்தகைய விதிமுறைகளைப் பின்பற்றும் ஹோட்டல்களுக்கு மட்டுமே இயங்க அனுமதி வழங்கப்படும்.

சுற்றுலாத் துறை மீண்டும் தொடங்கியவுடன் கோவாவிற்கு வருகைதரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு விதிமுறைகளின்படி கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்படும். மேலும் அவர்கள் தங்களது சுற்றுலாத் தலங்களைத் தவிர்த்து பொதுஇடங்களுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட மாட்டாது" எனத் தெரிவித்தார்.

கரோனா வைரஸ் இல்லாத மாநிலமாகத் திகழ்ந்த கோவாவில் தற்போது நோய்த் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதுவரை அம்மாநிலத்தில் 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 205 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 703 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details