தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

திருப்பதியில் லட்டுக்கு அளிக்கும் சலுகைகளை நிறுத்த முடிவு! - Decision to terminate the concessions offered to Laddu in the turn

அமராவதி: திருப்பதியில் தற்போது லட்டுக்கு அளிக்கப்பட்டு வரும் சலுகைகளை நிறுத்த அலுவலர்கள் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

லட்டுக்கு அளிக்கும் சலுகைகளை நிறுத்த முடிவு

By

Published : Nov 13, 2019, 6:47 PM IST

மக்களுக்குத் திருமலை என்ற பெயரைக் கேட்கும்போது, ​​முதலில் நினைவுக்கு வருவது ஸ்ரீஹரி திவ்ய ஸ்வரூபம். அதற்குப் பிறகு லட்டு பிரசாதம்தான். இங்கு வருகை தரும் பக்தர்களுக்கு பல்வேறு தள்ளுபடியில் லட்டுகள் வழங்கப்படுகிறது. சேவா சீட்டுகள் வைத்திருப்பவர்களுக்கும், ரூ. 300 நுழைவு சீட்டுகள் வைத்திருப்பவர்களுக்கும் இலவசமாக இரண்டு லட்டுகள் தரப்படுகிறது. மேலும் தர்ம தரிசனம், திவ்ய தர்ஷன், டைம்ஸ்லாட் டோக்கன்கள் வைத்திருக்கும் பக்தர்களுக்குத் தள்ளுபடி விலையில் இரண்டு லட்டுகள் வழங்கப்படுகிறது. இந்தத் தள்ளுபடியால் ஆண்டுதோறும் ரூ .241 கோடி நிதிச் சுமையை எதிர்கொள்வதாகத் திருமலை திருப்பதி தேவஸ்தானங்கள் நினைக்கின்றன. ஆனால், ஒருபோதும் லட்டு அளிப்பதை நிறுத்த நினைக்கவில்லையாம்.

ஆனால் தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அரசாங்கம், டி.டி.டி இழப்பைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கியது. இதனையடுத்து, முதலாளிகளுடன் ஒரு மறு ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்ட கூடுதல் ஈ.ஓ. தர்மரெடி, திருப்பதியில் ஏற்படும் இழப்பைத் தடுக்க நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களைச் சேகரித்தார்.

இங்கு வருகை தரும் ஒவ்வொரு பக்தருக்கும், பிரசாதத்தின் கீழ் 180 கிராம் லட்டு மட்டுமே இலவசமாக வழங்கப்படுகிறது. அத்துடன் கூடுதலாக, ஒரு லட்டு ரூ .50க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தள்ளுபடி வழங்கும் கொள்கையை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் எனவும் அதிகாரிகள் ஒருமித்த கருத்துக்கு வந்ததாகத் தெரிகிறது. இது தொடர்பாகக் கூடுதல் விவரங்கள் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 2018 பெருவெள்ளத்துக்குப் பிறகு 147 சுரங்கங்களுக்கு அரசு அனுமதி!

ABOUT THE AUTHOR

...view details