கரோனா அச்சுறுத்தல்: உயிரிழப்பு 9ஆக உயர்வு - உயிரிழப்பு 9ஆக உயர்வு
21:25 March 23
இமாச்சலப் பிரதேசத்தில் கரோனா வைரஸ் நோய் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்மூலம், மொத்த உயிரிழப்பு இந்தியாவில் 9ஆக உயர்ந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசம் தண்டாவில் 69 வயது திபெத்திய அகதி கரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இதையடுத்து அவர் உயிரிழந்துள்ளார். இதையடுத்து மொத்த உயிரிழப்பு இந்தியாவில் 9ஆக உயர்ந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து அவர் மார்ச் 15ஆம் இந்தியாவுக்கு திரும்பியுள்ளார்.
கரோனா வைரஸ் நோயைக் கட்டுப்படுத்தும் விதமாக பல மாநிலங்கள் முடக்கப்பட்டுள்ளன. இருப்பினும், அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருவதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது. தெலங்கானா, பஞ்சாப், பிகார், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 144 ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.