கேரளா மாநிலத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்துவருகிறது. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. காசர்கோடு, பாலக்காடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் மக்கள் நிலச்சரிவில் சிக்கினர். இந்த வெள்ளத்தில் வீடுகளை இழந்த இரண்டு லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள், அம்மாநில அரசு அமைத்துள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.
கேரளா வெள்ளம்; பலி எண்ணிக்கை 72ஆக உயர்வு! - கேரளா வெள்ளம்
திருவனந்தபுரம்: கேரளா மாநிலத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 72ஆக உயர்ந்துள்ளது என அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கேரளா வெள்ளம்
தற்போதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, வெள்ளத்தில் சிக்கி 72 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 58 பேர் காணாமல்-போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களை மீட்க தேசிய பேரிடர் மீட்புப் படை, பாதுகாப்புப் படை உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டன. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.